×

வேலு நாச்சியார் வாழ்க்கை சினிமா ஆகிறது

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் வீராங்கணையான வேலு நாச்சியாரின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்கப்போவதாக இயக்குனர் சுசி கணேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வீரமங்கை வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடுபோரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. என்று சுசி கணேசன் கூறியுள்ளார்.

Tags : Velu Nachiyar ,
× RELATED தமிழரின் பண்பை பறைசாற்றிய வேலு...